Latestமலேசியா

திரையரங்குகளில் இரண்டாவது வாரத்தில் குற்றம் செய்யேல் ! – Video

கோலாலம்பூர், மார்ச்.14 – இரட்டை இயக்குனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மலேசியாவின் ‘குற்றம் செய்யேல்’ திரைப்படம், தற்போது திரையரங்குகளில் இரண்டாவது வாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.

ஆஸ்ட்ரோ வானவில் மற்றும் சினி சத்திரியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் மார்ச் 7ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

உள்ளூர் திரைப்படங்களின் வரிசையில் மற்றொரு வெற்றித் தயாரிப்பாக அமைந்துள்ள குற்றம் செய்யேல் படம் நமது இளஞர்களில் சில தரப்பினரிடையே நிலவும் குண்டர் கும்பல் போக்கை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.எப்.எஸ் திரையரங்குகளிலும் டிஜிவி திரையரங்குகளிலும் தற்போது ரசிகர்களை ஈர்த்த வண்ணம் இருக்கும் இப்படத்தினை மலேசிய இயக்குனர் பாரதிராஜா மற்றும் தமிழக இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோரின் இணை இயக்கத்தில் வடிவம் கண்டது.

குண்டர் கும்பல் சீர்கேடுகள் குறித்த கதையை மையமாக கொண்டிருக்கும் நிலையில் சிறந்த நகைச்சுவைப் பின்னணியை குற்றம் செய்யேல் கொண்டிருப்பதால், மலேசிய ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இப்படத்தில் நமது நாட்டின் கல்லூரி மாணவர்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் கலக்கப் போவது யாரு புகழ் தினாவின் நகைச்சுவை அதிரடிகளால் அரங்கம் அதிர்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker