Latestஇந்தியா

பல நாடுகளில் பேஸ்புக்- வாட்ஸ்-அப் முடங்கியது! திணறிப் போன மக்கள்!

லண்டன், மார்ச்.14- பிரபல சமூக வலைத் தளங்களான பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் திடீரென முடங்கியதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

நேற்று இரவு முதல் ஏற்பட்ட முடக்கம் சில நாடுகளில் இன்னமும் சீர் செய்யப்படாமல் இருப்பதாக  அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செயலிகள் மீது பெரிய வைரஸ் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அதனை பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.

இது வைரஸ் தாக்குதல் இல்லை என்பதனை எங்களால் உறுதியாக கூறமுடியும். தொழில் நுடபக்கோளாறினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் பாதிக்கப்பட்டசெயலிகள் வழக்கநிலைக்கு கொண்டு வரப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில நாடுகளில் பேஸ்புக்கிற்குள் நுழைய முடிந்த போதிலும் அதற்குள் செயல்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இத்தகைய பிரதான சமூக வலைத் தளங்களின் முடக்கம் காரணமாக அதன் பயனர்கள்  பலர் தொடர்ந்து கவலை தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker