Latestஉலகம்

பள்ளிக்கூட கட்டிடம் சரிந்தது! 10 பேர் பலி! பலரின் கதியென்ன?

லாகோஸ், மார்ச். 14- நைஜீரியாவில்  பள்ளிக் கூடம் அமைந்திருந்த நான்கு மாடிக்    கட்டிடம் திடீரென சரிந்து விழுந்ததில், உள்ளே இருந்த நூற்றுக்கும் மேறபட்ட மாணவர்களில்   இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. லாகோஸ் தீவிலுள்ள  இடாபாஜி என்ற நகரில் நான்கு மாடி கட்டிடத்தின் மேல் மாடியில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்தது.  காலை 10 மணியளவில் கட்டிடம் தீடீரென சரிந்து விழுந்தது.

கட்டிடத்தில் உள்ளே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததாக தெரிகிறது. இச்சம்பவம் அறிந்து மீட்பு படையினரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் சிதைந்த கட்டிடத்திற்கு வெளியே நின்று பதறிக் கொண்டிருக்கின்றனர்.

முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என 40க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

முன்னதாக 2016 ஆம் ஆண்டில் தென்கிழக்கு நைஜீரியாவில் ஒரு தேவாலயம் இடிந்து விழுந்த போது 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker