Latestஉலகம்

பாகிஸ்தானில் டீக்கடை விளம்பரத்தில் அபிநத்தன் புகைப் படமா?

இஸ்லாமாபாத், மார்ச்.14- பாகிஸ்தான் கராச்சி நகரிலுள்ள ஒரு டீக்கடையில் அபிநத்தன் தேநீர் குடிக்கும் காட்சியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அபிநந்தன் புகைப்படத்தின் அருகே “இந்தக் டீக்கடையின் தேநீர் எதிரிகளை நண்பராக்கும்” என்ற வாசகமும் உருதுவில் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காஷ்மீரில் புல்வாமா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமான படையும் தாக்குதல் நடத்தியது.

பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்த இந்திய எல்லைக்குள் வந்த போது அந்த விமானத்தை இந்திய விமானங்கள் துரத்தின. இச்சம்பவத்தின் போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநத்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார்.

பாகிஸ்தான் பிடியில் அபிநத்தன் இருந்த போது அவர் தேநீர் அருந்திக் கொண்டுஅவர் இயல்பாக இருந்த காட்சிகள் வெளியாகின.  அதன் பின்  அபிநந்தனை இந்தியா வசம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள டீக்கடையில் அபிநந்தன் தேநீர் அருந்தும் காட்சியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கடையின் தேநீர் எதிரிகளை நண்பராக்கும் என்று வாசகமும் உருதுவில் இடம் பெற்றுள்ளது.

அபிநந்தன் புகைப்படம் உள்ள அந்த டீக்கடை பற்றி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து இந்த தகவல் இந்தியா- பாகிஸ்தானில் வைரலானது. இதன் காரணமாக வீதியோரத்தில் அமைந்துள்ள அந்த டீக்கடை கராச்சியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker