Latestஇந்தியா

பொள்ளாச்சி பாலியல் கும்பல் மிரட்டலால் 10 பெண்கள் தற்கொலை! அதிர்ச்சி தகவல்

சென்னை, மார்ச்.14- தமிழகத்தில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சமபவங்களில், மிரட்டல்களுக்கு பயந்து 10 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொள்ளாச்சி பள்ளி, கல்லூரி மாணவிகளை திருநாவுக்ரசு என்ற இளைஞன் மற்றும் அவனது நண்பர்கள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதனால் இவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் . உச்சக்கட்ட தண்டனையாக மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இவர்களின் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் விசாரணையை நேற்று தொடங்கினர்.

மேலும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பல இளம்பெண்களை பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்படுத்தி இதே போன்று ஆபாசபடம், வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

பல பெண்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போலீசில் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். சிலர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டனர்.

மேலும் பல மாணவிகள் அதிகார மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 10க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்தாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த வழக்குகளை காவல்துறையினர் குடும்ப பிரச்னை மற்றும் வியாதி காரணமாக தற்கொலை என முடித்து வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் 7 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பற்றிய பெயர் விவரத்தையும் சிபிசிஐடி போலீசார் சேகரிக்க துவங்கியு உள்ளனர். இதன் அடிப்படியில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker