Latestமலேசியா

ரந்தான் இடைத்தேர்தல்: இந்தியர்களே துருப்புச்சீட்டு!

கோலாலம்பூர், மார்ச். 14 – ரந்தாவ் தொகுதியின் இடைத்தேர்தலில் வெற்றி- தோல்வியைத் தீர்மானிப்பதில் இந்தியர்களே முக்கியம் வகிப்பதால் அங்கு டாக்டர் ஶ்ரீராம் சின்னசாமி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அத்தொகுதியில் இந்தியர்கள் 27 விழுக்காடும், மலாய்க்காரர்கள் 53 விழுக்காடும் சீனர்கள் 17 விழுக்காடும் இருக்கின்றனர்.

பக்காத்தான் இனம், சமயம் போன்ற பிரச்சினைகளைப் எழுப்பாது என்பதால், மற்ற இனங்களின் வாக்குகளைப் பெறும் என நம்பப்படுகிறது.

இத்தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளரும் முன்னாள் மந்திரி பெசாருமான முகமட் ஹசான் இந்தியர்களுக்குச் செய்த சேவையினால் இன்னும் செல்வாக்கோடு இருக்கிறார்.

மேலும் இரண்டு இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றி தங்களுக்குக் கைகொடுக்கும் என அக்கட்சியினர் நினைக்கின்றனர்.

அம்னோ- பாஸ் கட்சிகளின் இன ரீதியான கூட்டுறவை மலாய்க்காரர்களில் ஒரு சாரார் ஆதரிக்கவில்லை என்பதால், அவர்களின் 100 விழுக்காடு வாக்கு முழுமையாக தேசிய முன்னணிக்கு விழாது. எனவே, அங்கு ஶ்ரீராம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker