Latestஉலகம்

விமான விபத்து: ஒட்டுமொத்த இந்தியக் குடும்பம் உயிர்நீத்த துயரம்!

அடிஸ் அபாபா, மார்ச். 14- விமானத்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 கனடிய இந்திய வம்சவளியினர் பலியாகி உள்ளனர்.

கடந்த ஞாயிறு, எத்தோப்பியா பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 18 கனடியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்து விட்ட நிலையில், பலியான கனடியர்களில் இந்திய வம்சாவளியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் என்ற சோகச் செய்தி இப்போது கிடைத்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 14 வயது ஆஷ்கா டிக்சிட், 13 வயது அனுஷ்கா தீட்‌ஷித், அவர்களது பெற்றோர் 37 வயது கோஷா வைத்யா, 45 வயது பிரிட் தீட்‌ஷித், தாத்தா 73 வயது பனகோஷ் வைத்யா, பாட்டி 67 வயது அன்சினி வைத்யா ஆகியோர் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் என்ற விபரம் வெளியிடப் பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக கென்யாவுக்கு விடுமுறைக்கு சுற்றுலா பயணம் சென்றதாகவும் அதன் போதே இந்த விபத்து நேர்ந்தது என்றும் கனடாவிலுள்ள அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker