Latestமலேசியா

ஸாக்கிரை பாதுகாக்க பக்காத்தான் முயற்சிப்பதா? -ஹிண்ட்ராப் கண்டனம்

கோலாலம்பூர், மார்ச்.14- சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக் தங்களுக்கு ஊக்கமூட்டுபவராக இருப்பதாகப் பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா கூறியிருப்பதை ஹிண்ட்ராப் தலைவர் கார்த்திக் ஷான் சாடியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் மிரட்டலாகவும் இருக்கும் ஸாக்கிரை பாதுகாக்க, இந்தியர்கள் பக்காத்தானுக்கு வாக்களிக்கவில்லை. எனவே, அரசு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

பக்காத்தான் அரசு ஸாக்கிரை சமய போதகராக மட்டுமே நடத்த வேண்டும். மாறாக, பீடத்தில் வைத்து அலங்கரிக்கத் தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்திய குடிமகனான அவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில் மலேசியாவில் பிரிவினையை உருவாக்கவும் இன, சமய மோதலை ஏற்படுத்த முனைகிறார் என்று கார்த்திக் ஷான் குற்றஞ்சாட்டினார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker