Latestமலேசியா

ஸாக்கிர் நாயக்கை பாராட்டி பேசுவதா? -அமைச்சருக்கு லத்தீபா கடும் கண்டனம்

கோலாலம்பூர், மார்ச் 14 – சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கிர் நாயக்கை பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா நேற்று சந்தித்துப் பேசியதை வழக்கறிஞர் லத்தீபா கோயா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இம்மாதிரியான செயல் தொடர்ந்தால், முஜாஹிட் பாஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக ‘சுதந்திரத்திற்கான வழக்கறிஞர் அமைப்பின்’ இயக்குநர் லத்தீபா குறிப்பிட்டார்.

ஸாக்கிரை தாம் சந்தித்த புகைப்படத்தை முஜாஹிட் தமது முகநூலில் பதிவேற்றியதோடு ஸாக்கிரின் சமய போதனையானது உலகளவில் பிரசித்தி பெற்றிருப்பதாகவும் அது முஸ்லிம்களுக்கு ஊக்கமூட்டுவதாகவும் இருக்கிறது எனக் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதனை சுட்டிக்காட்டிய லத்தீபா, மற்ற சமயங்களை இழிவு படுத்திப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தும் ஸாக்கிர் எவ்வாறு நமக்கு ஊக்கமூட்டுபவராகச் இருப்பார்? எனக் கேள்வி எழுப்பினார்.

சமயங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, சமய நல்லிணக்கத்துக்கு அவர் ஊறு விளைவித்து அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலில் ஸாக்கிர் ஈடுபட்டிருப்பதாக லத்தீபா குற்றம் சாட்டினார்.

தீவிரவாதப் பிரசாரம் மற்றும் நிதி மோசடி போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் நீதிமன்ற உத்தரவுப்படி இந்தியாவினால் தேடப்படும் சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கை மலேசியாவில் இருந்து நாடு கடத்தும்படி இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், மலேசியாவின் நிரந்தர வசிப்பிட அனுமதியைப் பெற்று இங்கு வாழ்ந்து வரும் ஸாக்கிரை இந்தியாவுக்கு திருமப அனுப்பப் போவதில்லை எனப் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker