Latestமலேசியா

111 பள்ளிகள் மூடல்: ஆற்றில் நச்சுக் கழிவுகள் எப்படி வந்தன?

கோலாலம்பூர், மார்ச் 14 – ஜோகூர்,  பாசிர் கூடாங்கில் உள்ள சுங்கை கிம் கிம் ஆற்றில் கழிவுகளின் நச்சு வாயுவினால் 111 பள்ளிகள் மூடப்பட்டு 506 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  166  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

1.5 கிலோ மீட்டர் தூர ஆற்றை சுத்தப் படுத்த 64 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளது. அந்த ஆற்றில் 20 லிருந்து 40 வரையிலான கடலில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான எண்ணெய் கொட்டப் பட்டதாகவும் அது மெத்தேன் மற்றும் பென்ஸேன் வாயுவை வெளியேற்றும் தன்மையைக் கொண்டதாகச்  சொல்லப்படுகிறது.

ஆற்றில் மேலும் இன்னும் வேறு மாதிரியான நச்சு கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது டையர்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியான நச்சுக் கழிவுகளும் ஆற்றில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மார்ச் 6ஆம் தேதி, தாமான் பாசிர் பூத்தே மற்றும் கோத்தா மாசாயை இணைக்கும் பாலத்திற்கு அடியில்,  ஆற்றில்,  லோரி நிறைய  எண்ணெய் கொட்டப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த இடம் தாமான் பாசிர் பூத்தே தேசிய பள்ளி மற்றும் பாசிர் பூத்தே இடைநிலைப் பள்ளிக்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

அந்தக் கழிவுகளை ஆற்றில் கொட்டியதாக மூன்று தொழிற்சாலை உரிமையாளர்கள் மார்ச் 11இல் கைது செய்யப்பட்டு, விசாரணை தொடர்வதால்,  இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை.

மார்ச் 7இல் நச்சு வாயு வெளியேறி 103 பேர்  பாதிக்கப்பட்டனர்.  அதன் பின்னர்,  மார்ச் 11இல் 106 பேரும்  மார்ச் 12இல் 60 பேரும் பாதிக்கப்பட்டனர். மொத்தம்  506 பேர் இது வரை பாதிக்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker