Latestமலேசியா

நச்சு வாயுவைக் கட்டுப்படுத்த ஜோகூர் சுல்தான் ரிம.10 லட்சம் நிதியுதவி

ஜோகூர்பாரு, மார்ச் 14 – பாசிர் கூடாங் பகுதியில் ஆற்றிலிருந்து வெளியேறும் நச்சு வாயுவைத் துடைத்தொழிக்க ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ரிம. 10 லட்சத்தை வழங்குவதாக அறிவித்தார்.

நச்சு வாயுவினால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டு பாசிர் கூடாங்கில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டதைக் கேள்விப்பட்ட சுல்தான் கவலை கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட நிதியானது நச்சு வாயுவைக் கட்டுப்படுத்தத் தேவையான பொருள்களை வாங்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

நச்சு கலந்த கழிவுப் பொருள்களை ஆற்றில் கொட்டி இப்பிரச்சினைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker