Latestஉலகம்

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 3,000 பேர் ஒரே நாளில் சரண்!

மாஸ்கோ, மார்ச்.14- சிரியாவில் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகள் 3 ஆயிரம் பேர் ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.

சிரியாவில் அரசுப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வரும் அதே வேளையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ் பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன.

எனினும், டெயிர் ஜோர் மாநிலத்தில் உள்ள பாகுஸ் என்ற கிராமம் ஐ. எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையும் அவர்களிடம் இருந்து மீட்க அமெரிக்க கூட்டுப் படைகளுடன் இணைந்து சிரியா ராணுவம் அங்கு தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதற்கிடையே முழுக் கட்டுப்பாட்டையும் இழந்து விட்டதால் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து ராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிரியா ராணுவ வீரர்களிடம் சரண் அடைந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker