Latestமலேசியா

இடைக்கால துணை ஐஜிபியாக அப்துல் ஹமிட் நியமனம்

கோலாலம்பூர், மார்ச்.15- மார்ச் 17இல் பதவி ஓய்வு பெறும் துணை போலீஸ் தலைவரான டான்ஶ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிமிற்குப் பதிலாகச் சிறப்புப் போலீஸ் பிரிவின் இயக்குநர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் இடைக்கால போலீஸ் படைத் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

அவரின் பதவி சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கும் வரை தற்போதைக்கு அவர் இடைக்காலத் துணைத் தலைவராகப் பதவி வகிப்பார் என ஐஜிபி டான்ஶ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

நீண்ட காலம் தம்மோடு பணியாற்றிவர்களை விட்டுச் செல்வது வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்த நூர் ரஷிட், பதவி ஓய்வுக்குப் பின்னர், தமது போலீஸ் அனுபவத்தைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள எழுத்துத் துறையில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker