Latestஉலகம்

இந்தியாவில் மேலும் 6 அணு மின் நிலையங்கள்! அமெரிக்கா கட்டும்!

வாஷிங்டன், மார்ச்.15- இந்தியாவில் மேலும் 6 அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்து உள்ளது. வாஷிங்டனில் அமெரிக்கா ஆயுதக் கட்டுபாடு மற்றும் அனைத்துலக பாதுகாப்புத் துறையின் செயலாளர் ஆண்ட்ரியா தோம்சனை இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவில் 6 அணு மின்நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை பலப்படுத்தவும் இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் இந்தியாவில் அந்த 6 அணு  மின்நிலையங்கள் எங்கே, எப்போது அமைக்கப்படும் என்பது பற்றிய கூடுதலான எந்த தகவலும் அறிக்கையில் இடம் பெறவில்லை.

இந்தியாவில் தற்போது சென்னை கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களில் அணு மின்நிலையங்கள் உள்ளன. இவற்றுடன் அமெரிக்காவின் 6 புதிய அணு மின்நிலையங்களும் சேரும்.

இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த 2008 ஆண்டு சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா 12 நாடுகளுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை அடுத்து தான் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம்,  தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தங்களை செய்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker