Latestமலேசியா

இந்து சமய அவமதிப்பு: நபர் குற்றத்தை ஒப்பினார்!

கோலாலம்பூர், மார்ச். 15- இந்து சமயத்தை முகநூலில் இழிவு படுத்திய ஸம்ரி அப்துல் ரசாக் என்பவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார்.

பகுதி நேரப் புகைப்படக்காரரான ஸம்ரியின் மீது தகவல் மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு சிறையும் ரிம. 50,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் ஸம்ரி, இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தகப்பனாரைப் பராமரிக்க வேண்டி இருப்பதால், குறைந்தபட்சப் பிணைத் தொகையை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

எனினும், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரிம. 15,000 பிணைத் தொகையில், ஒருவர் உத்தரவாதத்தின் பேரில் அவரை விடுவித்தார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கின் தீர்ப்பு திங்கள் கிழமை அளிக்கப்படும்.

இஸ்லாத்தை முகநூலில் இழிவுபடுத்திய வேலையில்லாமல் இருந்து வரும் நபருக்கு 7 மாதச் சிறையும் ரிம. 10,000 அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில், அதே போன்ற குற்றத்திற்கு கடந்த வெள்ளியன்று, சரவாக்கில் நபர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறையும் ரிம. 50,000 அபராதமும் விதிக்கப்பட்டது எனப்து குறிப்பிடத்தக்கது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker