Latestமலேசியா

இறந்துவிட்டது போல் நடித்ததால் உயிர் தப்பினார் மலேசியர்!

கோலாலம்பூர், மார்ச் .15- நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் பள்ளிவாசல்களில் இன்று தொழுகையின் போது நடந்த கோரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது காயமடைந்த மலேசியரான ரஹிமி அகமட் சமயோசிதமாக, உயிரற்ற பிணம் போல நடித்ததால் உயிர் தப்பினார்.

டீன்ஸ் அவெனியூவில் உள்ள அல் நூர் பள்ளிவாசலுக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்ற பினாங்கைச் சேர்ந்த ரஹிமி அகமட் (வயது 36), துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து விட்ட நிலையில் இறந்தவர் போன்று சமயோசிதமாக நடித்து தப்பித்து உள்ளார்.

அவரின் நண்பரான முகமட் தர்மிஸி சுயிப்பும் (வயது 46) தமது மனைவி, பிள்ளைகளான ஹரிஸ் மற்றும் ஹஸீக் ஆகியோரோடு தொழுகைக்காக அதே பள்ளிவாசலுக்குச் சென்றிநுந்தார். அவர்கள் யாரும் காயமடையவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் சூடு பட்டுத் தப்பித்திருந்தாலும், ரஹிமி அகமட்டின் மகன் ஹாஸிக் அச்சம்பவத்தில் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணி மேற்கொள்ளப் படுவதாகத் தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker