Latestமலேசியா

ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வரின் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் எப்படி?

கோலாலம்பூர், மார்ச். 15- ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளும் நேற்று எஸ்.பி.எம். தேர்வு முடிகளைப் பெற்றனர். இந்த நாள், தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்கிறார் 52 வயதுடைய தந்தை சையட் நுர்ஷாடீர்.

ஓர் எஞ்ஜீரியரான சையட் நுர்ஷாடீர், கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். பிள்ளைகளின் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்காக அவர் கத்தாரில் இருந்து கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்.

ஒரே பிரசவத்தில் பிறந்து, ஒரே மாதிரியான முகத் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் இவர்கள் நால்வரின் எஸ்பிஎம் தேர்வு முடிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று எண்ணிவிடக் கூடாது.

மகள் ஷரீபா நஷிரா 5ஏ-க்கள் பெற்றார். மகன் சையட் நஷ்ரின் 8ஏ-க்கள் பெற்றார். மற்றொரு மகன் சையட் நட்ஷ்மி 3 ஏ -க்கள் பெற்றுள்ளார். மற்றொரு மகள் ஷரீபா நடிரா 7 ஏ -க்கள் பெற்றுள்ளார்.

“என் பிள்ளைகள் அனைத்துப் பாடங்களிலும் “ஏ’ எடுக்கவில்லையே என்ற கவலையெல்லாம் எனக்கு இல்லை. அவர்களின் முயற்சிகளை மட்டும் மதித்துப் பாராட்டுகிறேன்’ என்று தந்தை சையட் நுர்ஷாடீர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker