Latestமலேசியா

கிம் கொலை வியட்நாமிய பெண்ணுக்கு மனநலப் பரிசோதனை

கோலாலம்பூர், மார்ச். 15- வட கொரியத்தலைவர் கிம் ஜோங் யுன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வியட்நாமிய பெண்ணுக்கு உடல் மற்றும் மனநல பரிசோதனை செய்யப்பட்டது.

டோன் தி ஹுவோங் (வயது 30) குண்டு துளைக்காத உடையணிந்து இன்று காலை 9.20 மணிக்கு கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பரிசோதனை முடிந்து 10.40 மணியளவில் அவர் அங்கிருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வழக்கறிஞர் சாலிம் பாஷிர் தெரிவித்தார்.

நேற்று ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வந்தபோது, டோனுக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டது. அவரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதால், விசாரணை ஏப்ரல் 1க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இவருடன் சேர்த்துக் குற்றம் சுமத்தப்பட்ட இந்தோனேசியாவின் சித்தி அயிஷாவை நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்த பின்னர், டோன் மன ரீதியாகப் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி சித்தி அயிஷாவும் டோனும் கிம் ஜோங் நாமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நச்சு இரசாயனத்தை முகத்தில் தடவிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker