Latestமலேசியா

சோலார் மின் திட்ட ஊழல்: ரோஸ்மாவிடம் மேலும் விசாரணை!

புத்ரா ஜெயா, மார்ச். 15- மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் கையூட்டு பெற்றது சம்பந்தமாக முன்னாள் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோரிடம் ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை செய்யவிருக்கிறது.

சரவாக்கில் உள்ள 369 பள்ளிகளில் சூரிய கதிரின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைப் பெற்றுத்தர உதவியதற்காக கையூட்டு பெற்றதில் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்ததன் அடிப்படையில், அவரை மீண்டும் விசாரிக்க எம்ஏசிசி முடிவெடுத்துள்ளது.

2018ஆம் ஆண்டு நவம்பரில், மேற்கண்ட திட்டத்தின் வாயிலாக ரோஸ்மா இரண்டு தவணைகளில் 18.75 கோடி ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றுள்ளார் எனக் கூறப்பட்டது.

அதன் பின்னர் மேலும் 15 லட்சம் ரிங்கிட்டை ஜெபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சைடி அபாங் சம்சுடினிடமிருந்து அவர் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அந்தப் பணத்தை தமது உதவியாளர் ரிஸால் மன்சோரின் மூலம் அவர் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker