Videosசினிமா

டிவி சேனல் இயக்குனர் படுகொலை இளம் நடிகர் -நடிகை கைது!

ஐதராபாத், மார்ச்.15- நடிகர்கள் – நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று தான். தற்போது தெலுங்கு தேசத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் தொழிலதிபர் சிக்ருபதி ஜெயராம் படுகொலை சம்பவம்.

அவர் கோஸ்டல் பேங்க், எக்ஸ்பிரஸ் டிவி ஆகிய சேனலின் இயக்குனராக இருக்கிறார். கடந்த ஜனவரி 31இல் விஜய்வாடா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் காரினுள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறை இந்த சம்பவத்தில் விசாரணையை நடத்தி வருகிறது. இதில் தற்போது தெலுங்கு சினிமாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இதில் ஏற்கனவே முக்கிய குற்றவாளியாக ராகேஷ் ரெட்டி சிக்கியுள்ளார். தற்போது இளம் நகைச்சுவை நடிகர் சூர்யா பிரசாத், அவரின் உதவியாளர் கிஷோர், அஞ்சி ரெட்டி என்ற நடிகை ஆகியோர் பிடிபட்டுள்ளனர். இதனால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker