Latestமலேசியா

நச்சு வாயு: அவசரநிலை பிரகடனம் தேவையில்லை -மகாதீர்

புத்ராஜெயா, மார்ச்.15- பாசீர் கூடாங் சுங்கை கிம் கிம் ஆற்றில் நச்சு இரசாயனக் கழிவு கொட்டப் பட்டதால் பரவிய நச்சு வாயு தொடர்பில் ஜோகூர் மாநில அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் தாம் மனநிறைவு அடைவதாக கூறிய பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

எனவே பாசீர் கூடாங்கில் அவசர நிலைப் பிரகடனம் செய்ய வேண்டிய அவசிமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நச்சு இரசாயன விவகாரம் திடீரென நடந்த ஒரு விபத்து. இதன் காரணமாக உயிர்ப் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் அதிகாரிகள் கையாண்டு உள்ளனர்.

இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் குணமடைந்து விரைவில் அங்கிருந்து வெளியேறுவர் என்று துன் மகாதீர் சொன்னார்.

இந்த விவகாரம் மீது அவசர நிலைப் பிரகடனம் எதுவும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்ற தமது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker