Latestமலேசியா

நச்சு வாயு: மேலும் 780 பேர் பாதிப்பு: 113 பேர் மருத்துவமனையில்!  

பாசிர் கூடாங், மார்ச் 15 –  ஜோகூர், பாசிர் கூடாங்  சுங்கை கிம் கிம் ஆற்றிலிருந்து வெளியேறும் நச்சு வாயுவினால் புதிதாக 780 பேர் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கையோடு இதுவரை மொத்தம் 3,555 ஆக அதிகரித்து உள்ளது.  அதில் 202 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் 113 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக மாநில சுகாதார, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத் துறைகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஷாருடின் ஜமால் தெரிவித்தார்.

சுல்தானா அமீனா மற்றும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்ட 531 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த 8 நாள்களில், 2,775 பேர் நச்சு வாயுவினால் பாதிக்கப்பட்டதாக வியாழனன்று அறிவிக்கப்பட்டிருந்தது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker