Latestமலேசியா

நிர்வாணத் திருநங்கையால் 4-நம்பர் பிரியர்களுக்கு யோகமா?

கோலாலம்பூர், மார்ச், 15- கடந்த புதன் கிழமை புக்கிட் பிந்தாங்கில் நிர்வாண நடை போட்ட ஒரு திருநங்கை, நான்கு நம்பர் பிரியர்களுக்கு எதிர்பார்த்த மாதிரி அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து சேர்க்கவில்லை.

நேற்று முந்தினம் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் என நம்பப்படும் அந்தத் திருநங்கை புக்கிட் பிந்தாங்கில் சாலை ஓரத்தில் நிர்வாணமாக, நடந்ததோடு நகாரின் மீது ஏறி நின்று நடனமாடினார். இதனால் பெரும் பரபரப்பு எற்பட்டது.

பின்னர் இவர் கைது செய்யப்பட்டு உடனடியாக மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பப் பட்டார். போதைப் பொருள் உட்கொண்டதால் அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

ஆனால், அவர் கார் மீது ஏறி நின்றுது பலரது கவனத்தை ஈர்த்தது அவர் ஏறி நின்ற ஹோண்டா கார் தான். அதன் நம்பரை குறிவைத்து நம்பர் பிரியர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். நம்பர் கடைகளில் வரிசை பிடித்து நின்று அந்தக் கார் நம்பரை அவர்கள் வாரி அள்ளினர்.

இந்தத் திருநங்கையின் யோகம் தங்களுக்குக் கிட்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நம்பர் பிரியர்கள், முடிவுகள் வெளி வந்த போது பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.

மூன்று வகையான லாட்டரி சூதாட்டங்களில் இருந்து அன்றைய தினம் வெளிவந்த முடிவுகளில் ‘7076’ என்ற அந்த நம்பர் ஏறவில்லை ஏமாற்றம் தான் மிஞ்சியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker