Latestஇந்தியா

பொள்ளாச்சி பாலியல் கொடுமை; தமிழக முதல்வரை அதிர வைக்கும் கமல் காணொளி! (Video)

சென்னை, மார்ச்.15- பொள்ளாச்சியில் 400க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரத்திற்கு உட்படுத்தி 1,500 வீடியோக்களை எடுத்துள்ள செல்வாக்கு மிக்க பின்னணியைக் கொண்ட பாலியல் கும்பல் தொடர்பில் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆளும் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைச் சாடி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹசான் சரமாரியாக கேள்விகளை முதலமைச்சருக்கு முன்வைத்து வெளியிட்டுள்ள காணொளி தமிழகத்தை கலங்கடித்து உள்ளது.

பெண்களுக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் அழுது கதறும் குரல், அம்மா ஜெயலலிதாவின் பெயரால் ஆட்சி செய்கிறோம் என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டவில்லையா என்று கமல்ஹசான் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

பொள்ளாச்சி பாலியல் கும்பல் விவகாரத்தில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்குவதைக் கண்டித்தார் கமல்ஹசான்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக இந்தக் கேள்விகளை முன்வைக்கவில்லை. இரண்டு பெண்களின் அப்பாவாக இந்தக் கேள்விகளை கேட்கிறேன். என்ன செய்து, இந்தத் தப்புகளுக்கு பரிகாரம் செய்யப் போகிறீர்கள்? என்று தமிழக முதல்வரை நோக்கி வேதனையுடன் கமஹசான் முன்வைத்த கேள்வி தமிழக மக்களின் மனதை நெகிழ வைத்திருக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker