Latestஇந்தியா

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு பதிவு!

சென்னை, மார்ச்.15- பொள்ளாச்சி   பாலியல் விவகாரம் தொடர்பாக துணை சபாநாயகர், பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருகமன் சபரீசனுக்கு எதிராக சென்னை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தினால் தமிழகமே கொந்தளித்துப் போய் உள்ளது. இந்நிலையில் தன் மீது திமுக திட்டமிட்டு பழி சுமத்தி வருவதாக சில தினங்களுக்கு முன்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்து இருந்தார்.

ஆனால் அதன் பிறகும் சமூக வலைத்தளங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை தொடர்புபடுத்தி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இது போல சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக ஸ்டாலின் மருமகன் சபரீசன் தகவல் பரப்பி வருவதாக சென்னை காவல் துறையில் ஜெயராமன் புகார் அளித்தார்.

சபரீசன் தனது தகவல் தொழில்நுட்ப அணி மூலமாக இவ்வாறு புரளிகளைக் கிளப்பி வருவதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து இது மீண்டும் அரசியல் போட்டியாக மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆதாரமில்லாமல் கருத்து தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker