Latestமலேசியா

மலாய் வாக்காளர்களைக் கவர ஸாக்கிரை பயன்படுத்தாதீர்! – ஜி-25 அமைப்பு

கோலாலம்பூர், மார்ச் 15 – மலாய் வாக்காளர்களைக் கவர பக்காத்தான், ஸாக்கிர் நாயக்கை பயன்படுத்தக் கூடாதென ஜி25 எனும் முன்னாள் மலாய் உயர்மட்ட அரசு அதிகாரிகளின் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்லாத்தின் மிதவாத அணுகுமுறையைக் கொண்டிருக்கும் பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா, நேற்று முன்தினம், ஸாக்கிர் நாயக்கை சந்தித்து பேசியதோடு , அவரின் சமய உரைகள் தங்களுக்கு ஊக்கமூட்டுதாக உள்ளது என்று வர்ணித்தார்.

இன, சமய உணர்வுகளைத் தூண்டி பிரிவினையைத் தோற்றுவிக்கும் தரப்பாருடன் கைகோர்ப்பது பக்காத்தான் அரசுக்கு சரிவைத் தரும்.

அவரோடு ஒட்டி உறவாடுவது அம்னோவை விட சமய விவகாரங்களில் பக்காத்தான் தீவிரம் காட்டுவதைப் பறை சாற்றுவதாக இருப்பதாக அதன் பேச்சாளர் நூர் ஃபரிடா அரிஃபின் சுட்டிக்காட்டினார்.

மற்ற சமயங்களைக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து இழிவு படுத்திப் பேசியதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனிடையே 14ஆவது பொதுத்தேர்தலில் ஊழல் செய்த முஸ்லிம்களாக இருந்தாலும், முஸ்லிம்கள் அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமென ஸாக்கிர் நாயக் பிதற்றியுள்ளார் என்று அவர் சாடினார்.

இன, சமய உரைகளை நிகழ்த்தி சமய மோதலை உருவாக்கும் அவரை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளது. அவரது கடப்பிழையும் முடக்கி உள்ளதோடு சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளது.

எனவே, சமய உரை என்ற போர்வையில் மற்ற சமயங்களை இழிவு படுத்தும் நபர்களுக்கு எதிராகப் பக்காத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஃபரிடா கேட்டுக் கொண்டார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker