Latestஇந்தியா

ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டி! அப்துல் கலாமுக்கு முதல் வணக்கம்!

சென்னை, மார்ச்.15- இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்  தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹசான், ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்க உள்ளதாக

தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தேர்தல், மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஆகிஅய அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கி பலத்தை பரிசோதிக்க கமல்

முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன். தொகுதி எது என பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கட்சி அலுவலகத்தை  திறந்த  பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் ரமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் அதிபர் அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்று கமல் மரியாதை செலுத்தினார்.

அப்துல் கலாமின் லட்சியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமல் அவரின் நினைவிடத்தில் இருந்தே தன் அரசியல் பயணத்தை துவக்க விரும்பினார்.

இதனால் அவர் ராமநாதபுரம் தொகுதியை தேர்வு செய்துள்ளார். “பரமக்குடி மண்ணின் மைந்தன்” என்ற அடிப்டையில் மக்களின் ஆதரவு கிடைக்கும் என அவர் கணக்கு போட்டுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கமல் பெயரில் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களை திருப்திபடுத்தவும் கமல் இம்முடிவை எடுத்துள்ளார்.  எனவே, ராமநாதபுரம் தொகுதியில் கமல் களம் காண்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker