Latestமலேசியா

வாழைத் தோட்டத்தில் கொலை! திருட்டைத் தடுக்க முயற்சி!

குவாந்தான், மார்ச் 15 – வாழைத் தோட்டத்தில் புகுந்த திருடன் என நம்பப்பட்ட ஒருவன் வாகனத்தால் மோதி கொல்லப்பட்டான்.

பகாங், பெரா, கம்போங் பாய லாங்கில் இருக்கும்  வாழைத் தோட்டத்தில் திருடர்கள் ஊடுருவி இருப்பதாகத் தகவல் கிடைத்ததன் பேரில், தோட்ட உரிமையாளரின் மகன் அங்கு சென்றபோது, இரு மோட்டார் சைக்கிள்களில் 4 ஆடவர்கள் என நம்பப்படும் திருடர்கள்  தப்பித்து ஓடுவதைக் கண்டார்.

அவர்களை விரட்டிச் செல்லும்போது, தமது  4 சக்கர வாகனத்தைத் திருடர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்களை மோதியதில், அதனை ஓட்டிய நபர்கள் கீழே விழுந்தனர்.

அதன் பின்னர், தோட்ட உரிமையாளரின் மகன் அதனை போலீசில் புகார் செய்துள்ளார். மோதித் தள்ளப்பட்ட நபர்களில் கடுமையாகக் காயமடைந்த ஒருவர்,  திரியாங் சுகாதார மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர்,   மரணமடைந்ததாக  அறிவிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட நபருக்கு 25 வயது இருக்கும் என்றும் அவருடன் சென்ற 31 மற்றும் 33 வயது மதிக்கத்தக்க இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அதோடு, 22 வயதான தோட்ட உரிமையாளாரின் மகன், 2 நண்பர்கள், இந்தோனேசிய தொழிலாளி ஆகியோரும் கைது செய்யப் பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker