Latestஉலகம்

விபத்துகள் எதிரொலி: உலகளவில் போயிங் 737 விமானங்கள் பறக்கத் தடை!

வாஷிங்டன், மார்ச்.15- பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலியாக உலகம் முழுவதும் போயிங் 737 விமானங்கள் பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கடந்த 2017ஆம் ஆண்டு “போயிங் 737 மேக்ஸ் 8” ரக பயணிகள் விமானங்களை அறிமுகம் செய்தது.

இந்த ரக விமானம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே உலக நாடுகளிடம் இருந்து அதிக ஆர்டர்கள் பெற்றது. அதன்படி போயிங் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தயாரித்து வழங்கியது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் பாதம் 25 ஆம் தேதி இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான “போயிங் 737 மேக்ஸ் 8” ரக விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 189 பேர் உயிர் இழந்தனர்.

அதே போல் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்த 10ஆம் தேதி விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

விமானம் பயன்பாட்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொடர்ந்து 2 பெரும் விபத்துகளை சந்தித்ததால் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

இதனால் சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தடை விதித்தன. குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்த ரக விமானங்களை இயக்க தடை விதித்ததோடு தங்களின் வான்பரப்பில் இந்த விமானங்களை பறக்கவும் தடை விதித்தன.

எனினும் இந்த விமானத்தில் குறைபாடு இருப்பதாக காட்டுவதற்கு ஆதாரம் இல்லை என கூறி அமெரிக்கா மட்டும் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வந்தது.

ஆனால் எத்தியோப்பியா விமான விபத்து தொடர்பாக புதிய ஆதாரம் ஒன்றை விசாரணையாளர்கள் கண்டு பிடித்ததை அடுத்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் சேவையை நிறுத்துவதாக அமெரிக்காவும் அறிவித்தது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker