Latestமலேசியா

நியூசிலாந்தில் 2 பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு! கும்பல் அராஜகம்!

கிறிஸ்ட்சர்ச், (நியூசிலாந்து) மார்ச்.15- கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் புகுந்து  வெள்ளிக் கிழமைத்  தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் பலர் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூன்று ஆடவர்கள் மற்றும் ஒரு பெண் உள்படநால்வரைத் தாங்கள் கைது செய்திருப்பதாக போலீஸ் ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டின் போது அங்கிருந்தோர் பதறியடித்துக் கொண்டு பல்வேறு திசைகளில் சிதறி ஓடியதாகவும் பலர் இரத்தம் கொட்ட வெளியேறினர் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்.

அனைத்து பள்ளிவாசல்களையும் தற்காலிகமாக மூடும்படி போலீசார் ஆலோசனை கூறியுள்ளனர். அதேவேளையில் நகரிலுள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உயிருடற்சேதம் குறித்து உடனடித் தகவல் இல்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker