Latestமலேசியா

BSH உதவிநிதி; இறுதி நாள் மக்கள் திரண்டனர்! -(Video)

ஈப்போ, மார்ச். 15- ‘பிரிம்’ திட்டத்திற்காக மாற்றாக, பெயர் மாற்றம் கண்ட பந்துவான் சாரா ஹுடூப் (BSH) மக்கள் உதவித் திட்ட நிதியுதவிக்கு விண்ணப்பிக்க இன்று தான் இறுதி நாள் என்பதால் பல இடங்களிலுள்ள வருவாய்த் துறை அலுவலகங்களில் மக்கள் நிரம்பி வழிந்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் உதவி நிதி பெற விரும்புவோர் பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பப் பாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கால அவகாசம் வழங்கப் பட்டிருந்தது.

மேலும் ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, முன்பு இல்லாமல் இதற்கான விண்ணப்ப நிபந்தனைகள், பெரிதும் தளர்த்தப் பட்டிருந்தன.

அதேவேளையில் விண்ணப்பங்களுடன் சேர்க்கப்பட வேண்டிய ஆவணங்கள் கூடக்குறைய இருந்தாலும் அது பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இறுதிநாள் என்பதால் பல இடங்களில் இளையோர்களும் முதியவர்கள் திரளாக விண்ணப்பிக்க வந்திருந்தனர்.

ஈப்போவில் மிகப்பெரிய அளவில் வருவாய் அலுவலகத்தில் கூட்டம் குவிந்து இருந்தது. குறிப்பிட கால அவகாசத்திற்குள் விண்ணப்பங்களை அனைவரும் சமர்ப்பிக்க முடியுமா? என்ற சந்தேகமும் அச்சமும் பலரிடமிருந்து வெளிப்பட்டது.

எனினும் உரிய காலத்திற்குள் அனைத்து விண்ணப்பங்களும் உரிய அதிகாரிகளால் பெற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker