Latestமலேசியா

SPM -இல் 7-ஏ பெற்ற மாணவர் விபத்தில் மரணம்!

ஜித்ரா, மார்ச். 15- எஸ்பிஎம் தேர்வில் 6-ஏ பெற்ற மாணவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான துயரச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து ஜித்ரா, பண்டார் டாருல் அமான் இணைப்புச் சாலையின் 6.13ஆவது கிலோ மீட்டரில் நேற்று மாலை 6.13 மணியளவில்ஐந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

முகமட் ஹக்கிமி சபாருடின்(வயது 18) என்ற அந்த மாணவரின் மோட்டார் சைக்கிள், நண்பரின் மோட்டார் சைக்கிளோடு மோதி கீழே விழுந்ததில், முகமட் ஹக்கிமி சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமடைந்தார்.

இது பற்றிக் குறிப்பிட்ட குபாங் பாசு போலீஸ் தலைவர் முகமட் இஸ்மாயில் இப்ராஹிம், முகமட் ஹக்கிமிக்கு முன்னால் சென்ற நண்பர், இடது புறம் திரும்பவே, திடிரென மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

ஹக்கிமியின் மோட்டார் சைக்கிள் அவரின் மோட்டார் சைக்கிளோடு மோதியதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததார். கால் முறிந்த அவரது நண்பர் அம்ஸார் சிகிச்சைக்காக ஜித்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஹக்கிமியின் உடல், சவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுவதாக இஸ்மாயில் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker