Latestஉலகம்

அதிபர் தேர்தல்: தம்பியை நிறுத்துகிறார் மகிந்த ராஜபக்சே!

கொழும்பு, மார்ச்.16- எதிர்வரும் அதிபர் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் தன்னுடைய தம்பியுமான கோத்தபாய ராஜபக்சேயை நிறுத்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே முடிவு செய்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்சே குடும்பத்தினரின் முழுமையான ஆதரவுடன் முன் வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அண்மைய காலமாக அந்த கட்சிக்குள் முரண்பாடுகள் நிலவி வந்தன.

இது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிபர் வேட்பாளர் குறித்து கூட்டு எதிர்க்கட்சி முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கக் கோரும் விண்ணப்பத்தை கோத்தாபய ராஜபக்சே கடந்த வாரம் சமர்ப்பித்து இருப்பதாகவும் இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker