Latestஉலகம்

அமைதிக்கான நோபல் பரிசு: 16 வயது சிறுமியின் பெயர் பரிந்துரை

நோர்வே, மார்ச்.16- இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப் பட்டுள்ளார். சுவீடனை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க் என்பவரே அவர்.

இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவ நிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலை தடுக்க வலியுறுத்தி சுவீடனின் நாடாளுமன்ற வாசலில் சிறிய பதாகையுடன் அமைதிமான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார்.

மேலும் உலக தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை புறக்கணிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

இதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து கிரேட்டா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அது மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வெள்ளியன்று பள்ளிக்கு செல்வதை விடுத்து நாடாளுமன்ற வாசலில் உலக வெப்ப மயமாதலை தடுக்க வேண்டி அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறுமி கிரேட்டா தன்பெர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இவ்விருதுக்கு மொத்தம் 304 பேர் பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளனர். அதில் 219 தனி நபர்கள். 85 அமைப்புகள் உள்ளதாக நோர்வையைச் சேர்ந்த நோபல் குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker