Latestஉலகம்

உலகின் மிக அழகான கையெழுத்து: நேபாள மாணவிக்கு குவியும் பாராட்டு!

காட்மாண்டு, மார்ச்.16- உலகிலேயே மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இது குறித்து நேபாள ஊடகங்கள் பெருமையாக தகவல் வெளியிடுகின்றன. அச்சில் பதித்தால் கூட எவ்வளவு அழகாக எழுதுவது என்பது சாதாரண மனிதர்களினால் முடியாத காரியம் ஆகும்.

அச்சில் கோர்த்து பதித்தது போல குறித்த மாணவி தனது பாடக் குறிப்புகளை எழுதியுள்ளார். இவ்வாறு அவர் எழுதி எழுத்துக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

பரக்கர்ரி மல்லா எனும் பெயர் கொண்ட இச்சிறுமி பார்ப்போர் அனைவரையும் தனது எழுத்துகளினால் வென்று விடுகிறார். இந்தச் சிறுமிக்கு இவளது மிகச் சிறந்த எழுத்துப் புலமையைப் பாராட்டி அந்நாட்டு அரசு கவுரவ பாராட்டுப் பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker