Latestமலேசியா

கல்விக் கடன் தொல்லையில் சிக்காதீர்கள்! -இந்திய மாணவர்களுக்கு ஆலோசனை

ஈப்போ, மார்ச். 17- எதிர்காலத்தில் கல்வித் திட்டம் குறித்து இந்திய மாணவர்கள் சரியான முடிவை எடுக்க முடியாமல் கடன் பெற்று கல்வியைத் தொடர்ந்து பின்னர் வேலையின்றி கடனையும் செலுத்த முடியாமல் இன்னல்களுக்கு ஆளாகி வருவதை தவிர்க்க சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று மலாயா பல்கலைக் கழக இந்திய பட்டதாரிகள் அமைப்பின் (குமிட்) ஒருங்கிணைப்பாளர் ஆர். சிவமணி கேட்டுக் கொண்டார்.

இந்திய மாணவர்கள் சிறந்த நிலையை அடைய சரியான முடிவினை எடுக்கவேண்டும். மாணவர்கள் தங்களின் கல்வி தேர்ச்சிக்கு ஏற்ப அரசாங்க கல்விக் கூடங்களில் கல்வியைத் தொடர வாய்ப்புகள் நிறைய உள்ளன.

அவர்களுக்கு வழிகாட்டவே தற்பொழுது நாடு தழுவிய நிலையில் குமிட் ஏற்பாட்டில் எஸ்.பி. எம் மற்றும் எஸ்.டி.பி. எம். தேர்வின் முடிவைப் பெற்ற மாணவர்களுக்கு வழி காட்ட ‘அரசாங்க உயர் கல்விக் கூடமே நமது முதல் தேர்வு’ எனும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

இன்று இங்குள்ள செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளியில் இப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் மற்றும் நேசக்கரங்கள் இயக்கத்தின் ஆதரவுடன் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதில் பெரும் திரளான மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்விற்கு பேராதரவு கிடைத்துள்ளதைக் காணும் போது மகிழ்ச்சியை அளிப்பதாக ஆர். சிவமணி கூறினார் .

பலர் முறையான ஆலோசனைகள் பெறாமல் கல்வியை தொடரும் போது கல்விக் கடன் தொல்லைக்கு பல மாணவர்கள் ஆளாகி வருகிறார்கள். இதிலிருந்து விடுபட நமது மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

இங்கு இந்தக் கருத்தரங்கை நடத்த சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த செயிண்ட் பிலோமினா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். ஜெயசீலன் மற்றும் அவரது குழவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker