Latestமலேசியா

துப்பாக்கிச் சூடு: கணவரின் நிலையென்ன? மலேசிய மனைவி தவிப்பு!

கோலாலம்பூர், மார்ச். 16 – நியூசிலாந்து, கிரிஸ்சர்ச்சின் துப்பாக்கிச் சூட்டில் மூன்றாவது நபராக மற்றொரு மலேசியரும் காயமடைந்துள்ளார் என்று செய்திகள் கூறினாலும், அவரின் நிலைப் பற்றி இன்னும் தெரியவில்லை.

புஞ்சாக் ஆலம் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியராக இருக்கும் நோர்மல் ஸுரினாவத்தி, தாம் தாய்லாந்தில் கல்விச் சுற்றுலா மேற்கோண்டு சென்றிருந்தபோது, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியை அறிந்ததாகத் தெரிவித்தார்.

அங்கிருக்கும் தமது மகன்களான முகமட் ஹாக்கீம் டேனியல் (வயது18), முகமட் ஹசீக் டேனியல்(14) மற்றும் முகமட் ஹஸ்ரிக் டேனியல் ( வயது10) ஆகியோர் தூப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப் படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார்.

ஆனால், தமது கணவர் நஸ்ரில் ஹிஷாம் ஒமார் (வயது 46) பள்ளிவாசலில் சுடுபட்டுள்ளார் என்றும் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாலும், அவரின் நிலை பற்றி தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.  அடுத்த வாரம் தாம் நியூசிலாந்துக்குச் சென்ற பின்னர்தான், கணவரின் நிலை பற்றி அறிய முடியும் என தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker