Latestமலேசியா

நச்சுக் கசிவு: வெளிநாடு பயணமா? மந்திரி பெசாரை சாடினார் நஜிப்!

ர் பாரு, மார்ச் 16 – பாசிர் கூடாங்கில் மக்கள் நச்சு வாயுவினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் பாத்தாம் தீவுக்கு மந்திரி பெசார் சென்றது பொறுப்பற்ற செயல் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சாடியுள்ளார்.

பேரழிவுக்கு சமமான நிலையில் மாநிலம் பாதிக்கப் பட்டிருக்கும் போது, 2020 -இல் நடக்கவிருக்கும் ஜோகூருக்கு வாருங்கள் எனும் விளம்பர மேம்பாட்டு நிகழ்ச்சிக்காக ஓஸ்மான் சாப்பியான் இந்தோனேசியாவின் பாத்தாம் தீவுக்குச் சென்றது ஏற்றுக் கொள்ள முடியாதது என நஜிப் சுட்டிக்காட்டினார்.

2014 ஆம் ஆண்டில் நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்த போது அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய நிலையில் அதனை ரத்து செய்து விட்டுத் தாம் வெள்ளப் பகுதிகளுக்கு வருகை புரிந்து மக்களைச் சந்தித்ததை நஜிப் நினைகூர்ந்தார்.

சுங்கை கிம் கிம் ஆற்றுப் பகுதியில் கொட்டப்பட்ட நச்சுக் கழிவின் காரணமாக நச்சு வாயு பரவி பாசீர் கூடாங் பகுதியில் இதுவரை 2,500 பேர் சுவாசப் பிரச்னைக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker