Latestமலேசியா

நச்சு வாயு: மன அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டோரே அதிகம்!

ஜோகூர் பாரு, மார்ச். 16 – பாசிர் கூடாங் நச்சு வாயுவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்திருந்தோரில் பெரும்பாலும் மன அதிர்ச்சியினாலும் கவலையினாலும் பீடிக்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மெர்சி மலேசியாவின் மனநல ஆலோசகர் டாக்டர் அஸ்லினா ரோசி முகமட் கபார், சிகிச்சைக்காக வந்திருந்தோரில் 70 லிருந்து 90 விழுக்காட்டினர் மன அதிர்ச்சியினால் பீடிக்கப் பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

கவலையே அதிர்ச்சியாக மாறி இருப்பதாகவும் அதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம், மன இறுக்கம் போன்றவை உருவாகியுள்ளன என்றும் அவர் சொன்னார்.

இந்நிலையில், இதற்கு முன்னர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு நிலைமை இன்னும் கடுமையாகக் கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker