Latestஉலகம்

நியூசி. துப்பாக்கிச் சூடு; ஆசாமி மீது கொலைக் குற்றச்சாட்டு!

வெல்லிங்டன், மார்ச் 16 – நியூசிலாந்து, கிரிஸ்சர்ச்சிலுள்ள பள்ளிவாசல்களில் 49 பேரை சுட்டுத் தள்ளிய சமபவத்தில் கைது செய்யப்பட்ட 28 வயது ஆசாமி மீது இன்று நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பிரெண்டன் ஹேரிசன் டாரண்ட் என்பவன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டான். அவனுக்கு எதிராக மீது நியூசிலாந்து மாவட்ட நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அப்போது, அவரின் கைகளில் கைவிலங்கு பூட்டப் பட்டிருந்ததோடு, சிறையின் சீருடையையும் அணிந்திருக்கக் காணப்பட்டார்.

பின்னர் அவன் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலில் இந்த நபருக்கு எதிராக ஒரேயொரு கொலைக் குற்றச்சாட்டு மட்டுமே சுமத்தப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இன்னும் சிலரும் சம்பந்தப் பட்டுள்ளதால் பின்னர் இன்னும் கூடுதலான குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்பட்டது.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker