Latestமலேசியா

பிரதமர் தெரசா மே பதவி விலக நெருக்குதல்!

லண்டன், மார்ச்.16- ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு தொடர்பிலான ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் நிறைவேற வேண்டுமானால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே பதவி விலக வேண்டும் என வெளிப்படையாகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அடுத்த வாரம் தனது ஒப்பந்தம் மீதான மூன்றாவது வாக்கெடுப்பு ஒன்றிற்கு வாக்களிக்குமாறு தெரசா மே பதவி விலக வேண்டியிருக்கும் என வெளிப்படையாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் தனது ஒப்பந்தம் மீதான மூன்றாவது வாக்கெடுப்பு ஒன்றிற்கு வாக்களிக்குமாறு தெரசா மே நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்ள இருக்கும் நிலையில் பிரெக்சிட் நீண்ட காலம் தாமாதம் ஆவதை தடுக்க அது தான் ஒரே வழி என்பதை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50ஆவது பிரிவை நீட்டிக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில் தனது ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் அதற்கு ஜூன் மாதம் வரை ஆகலாம் என்றும் அவர்கள் மூன்றாவது முறையும் அதை நிராகரித்தால் இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தெரசா மேயின் முன்னாள் கொள்கை பிரிவு தலைவரான ஜோர்ஜ் பிரிமென், பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்வதாக உறுதியளிப்பது தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறச் செய்வதற்கான ஒரே வழி என்று எம்பிகள் பலர் கருதுவதாக கூறியுள்ளளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker