Latestஇந்தியா

பெயரை அம்பலமாக்குவதா? பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு! தமிழக அரசுக்கு உத்தரவு

மதுரை, மார்ச்.16- பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட தமிழக அரசு அதற்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் கோவை மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி பயங்கரத்தில் பாதிக்கப்பட்டு போலீசில் புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரங்கமாக சொன்னார் கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன்.

இது சர்ச்சையான நிலையில் தெரியாமல் சொல்லி விட்டேன் ன்று அற்கு விளக்கம் அளித்தார்.

ஆனால் இவ்வாறு புகார்தாரர் தகவலை வெளிப்படுத்திய காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இவ்வாறு புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டால் 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால் இந்த விதிமுறையை எஸ்.பி. பாண்டியராஜன். பின்பற்றவில்லையென வழக்கில் கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன்-சுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால நிவாரணமாக 25 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். எஸ்.பி. பாண்டியராஜன். மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker