Latestமலேசியா

பேரா மந்திரி புசார் மீது அவதூறு பரப்புவது ஏன்? – துன் மகாதீர்

கோலாலம்பூர், மார்ச். 16-பேரா மந்திரி பெசார் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு அவதூறான செய்திகளைப் பரப்பி வந்தாலும், அவரை மாற்ற திட்டம் எதுவும் இல்லை பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

அவரின் பதவியைக் குறி வைத்தே எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர் என்று புத்ரா ஜெயாவில் நடந்த இளைஞர் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது மகாதீர் சொன்னார்.

அதேவேளையில், பாசிர் கூடாங்கில் நச்சு வாயுவினால் மக்கள் அவதிப்படும்போது, ஜோகூர் மந்திரி பெசார் ஓஸ்மான் சாப்பியான் அடிக்கடி இந்தோனேசியா பாத்தாம் தீவுக்குச் சென்று வருவது பற்றித் தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே பொது கணக்குக் குழு (பிஏசி) தலைவராக ரிச்சர்ட் சியான்டியே நீடிப்பார். மேலும், அவர் அப்பதவியில் தொடர்வதை யாரும் எதிர்க்கவில்லை என துன் மகாதீர் தெரிவித்தார்.

ரிச்சர்ட் கியான்டி தேசிய முன்னணியில் இருந்தபோது பிஏசியின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் தற்போது சபா அம்னோவில் இருந்து விலகியிருந்தாலும் அவரை மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை என துன் மகாதீர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker