Latestமலேசியா

போலீஸ் லோரியில் சிக்கி தந்தை- 2 பிள்ளைகள் மரணம் !

மாச்சாங், மார்ச். 16- போலீஸ் லோரி ஏறி, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையும் 2 பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

நேற்று இரவு 9 மாச்சாங் பாசிர் பூத்தே சாலையின் 1.9 கிலோ மீட்டரில் இந்தத் துயரச் ச்சம்பவம் நடந்துள்ளது. அம்மூவரும் ஏறிச் சென்ற மோட்டார் சைக்கிளை பேருந்து ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் விழுந்தது.

அவர்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த போலீஸ் லோரி வாகனம் அவர்களின் மீது ஏறியதில் முகமட் அஸ்னி முகமட் ஸாக்கி (வயது 34) முகமட் அர்யான் ஸிக்ரி (வயது 7), நூர் அம்னா நபீசா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.

முச்சந்தி ஒன்றில் திரும்ப முயன்றபோது, மாச்சாங்கிலிருந்து பாசிர் பூத்தேவிற்கு எதிர்புறத்திலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என மாச்சாங் போலீஸ் துணைத் தலைவர் முகமட் சம்சுரி முகமட் ஸின் தெரிவித்தார்.

அச்சமயத்தில் பெண் குழந்தை முன் இருக்கையிலும் சிறுவன் பின்னாலும் அமர்த்து சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக 44 வயதான பேருந்து ஓட்டுநர் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாகவும் மரணமடைந்தோரின் உடல்கள் சவப் பரிசோதனைக்காக மாச்சாங் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் முகமட் சம்சுரி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker