Latestஉலகம்

மகன்களை கட்டியணைத்து குண்டுகளை தன் முதுகில் ஏற்றுக் கொண்ட தந்தை!

கிறிஸ்ட்சர்ச், மார்ச்.16- நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டின் போது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது இரு மகன்களை காப்பாற்றுவதற்காக குண்டுகளை முதுகில் சுமந்து பெரும் காயத்திற்கு ஆளாகி உள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், அதை தன் தலையில் பொருத்தியிருந்த அதி நவீன கமெராவில் படம் படித்து பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நேரலையில் ஒளிபரப்பினான்.

இந்த துப்பாக்கி சூட்டின் போது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது இரு மகன்களை காப்பாற்றுவதற்காக குண்டுகளை முதுகில் சுமந்து பெரும் காயத்திற்கு ஆளாகியுள்ளார்.

துபாயில் வசித்து வரும் ஈராக் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் அதீப் சமி தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.

இரு மகன்களுடன் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதி திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதீப் சமி, தனது இரண்டு மகன்களையும் காப்பாற்றுவதற்காக அவர்களை இறுக கட்டியணைத்து கொண்டு குண்டுகளை தனது முதுகில் வாங்கி கொண்டார்.

குண்டு பாய்ந்ததால் படுகாயம் அடைந்த அதீப் சமி இரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருண்டு மகன்களும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் தந்தை அதீப் சமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker