Latestசினிமா

‘மகாபாரதம்’ -எனது கடைசிப் படம்! – ராஜமவுலி கூறுகிறார்

ஐதராபாத், மார்ச்.16- பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி, தாம் ‘மகாபாரதம்’ என்ற படத்தை தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அதுவே தனது கடைசிப் படமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

பாகுபலி -2 படத்தை அடுத்து, ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரண் நடிப்பில் ஆர். ஆர். ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தி பிரபலங்கள் அஜய் தேவ்கான்- ஆலியா பட் ஆகியோர் நடிக்க, சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட கதையில் இப்படம் உருவாகிறது.

‘மகாபாரதம்’ இவரின் அடுத்தப் படம் இதுவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதுப்பற்றி ஆர். ஆர். ஆர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜமவுலி பேசிய போது, ”எனது அடுத்தப் படைப்பு மாகபாரதம் அல்ல. ஆனால் அது எனது கடைசிப் படமாக இருக்கலாம். அதன் கதை இன்னும் எனது மன ஓட்டத்தில் இருக்கிறது என்று சொன்னார்.

மகாபாரதக் கதையைப் படமாக்கினால் நிச்சயம் நான்கைந்து பாகங்களாக வெளியாகும். மொத்த படமும் முடிய 10 ஆண்டுகளாவது ஆகும். எனவே அது எனது கடைசிப் படமாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker