Latestமலேசியா

மோட்டார் சைக்கிளை கார் மோதியது கார்! கண்காணிப்பாளர் மரணம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 16 – இன்று அதிகாலையில் கூட்டரசு நெடுஞ்சாலையில் காரொன்று மோட்டார் சைக்கிளை மோதியதில், கண்காணிப்பாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த நெடுஞ்சாலையின் 29.3 கிலோ மீட்டர், ஜாலான் கிளாங் லாமாவுக்கு அருகில், காலை 5.36 மணியளவில், அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளை மோதியதில், முகமட் லுக்மான் நுர்ஹாக்கிம் மஹ்மூட் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

சவப் பரிசோதனைக்காக உடல் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஹோட்டல் ஊழியரான 27 வயது கார் ஓட்டுநர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் பெட்டாலிங் ஜெயா துணை ஆணையர் முகமட் ஸானி செ டின் தெரிவித்தார். இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1) இன்கீழ் விசாரணை செய்யப்படும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker