Latestஉலகம்

ஆஸி. செனட்டருக்கு முட்டை அடி! பதிலுக்கு தாக்கிய செனட்டரால் பரபரப்பு! -(Video)

மெல்பர்ன், மார்ச். 17- ஆஸ்திரேலிய செனட்டர் ஒருவர் மீது இளைஞன் ஒருவன் மூட்டையை வீசி அடித்துப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

நாட்டுக்குள் நுழையும் அந்நிய நாட்டவர்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசிவரும் ஆஸ்திரேலிய செனட்டர் பிரேசர் ஆன்னிங் என்பவர். இவர் பெல்பர்ன் நகரில் கருத்தரங்கு ஒன்றில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், இச்சம்பவம் நடந்துள்ளது.

-Video source: you tube

17 வயது இளைஞன், தனது கைகளில் கைப்பேசியையும் முட்டையுடன் மேடையின் பின்னால் இருந்து வந்து செனட்டர்  ஆன்னிங்கின் பின்புறத்தலையில்  திடீரென முட்டையால் ‘நச்’ என்று அடித்தான்.

ஆனால் ஆவேசமடைந்த செனட்டர் ஆன்னிங், பக்கவாட்டில் திரும்பி, அந்த ஆடவனின் கன்னத்தில் இரண்டு அறை விட்ட பின்னர், காவலர்கள் அவனைக் கைது செய்துள்ளனர்.

குய்ன்ஸ்லாந்து செனட்டரான அவர், நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு முஸ்லிம்களையும் குடியேறிகளையும் காரணமாகக் கூறி கடுமையாக் விமர்சித்தார். அது பல தரப்புக்களிடம் இருந்து கடும் கண்டனத்தை ஏறப்டுத்தியது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசனும் முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் செனட்டர் ஆன்னின் விமர்சனங்களைச் சாடியதோடு அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker