Latestமலேசியா

நச்சுக் கசிவு: ஜோகூரில் ஆற்றில் இருந்து 1,250 டன் கழிவு அகற்றப்பட்டது

பாசிர் கூடாங், மார்ச். 17- பாசிர் கூடாங்கில் உள்ள சுங்கை கிம் கிம் ஆற்றின் 1.3 கிலோ மீட்டர் பகுதி சுத்தப்படுத்தப் பட்டுள்ளதாக ஜோகூர் சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயத் துறை ஆட்சிக் குழுத் தலைவர் டாக்டர் ஷாஹ்ருடின் ஜமால் தெரிவித்தார்.

அங்கிருந்து அகற்றப்பட்ட 1,250 டன் கழிவில் 550 டன் மண்ணும் சேறும், 700 டன் மாசுபடித்த நீரும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று முன்னிரவு வரை, சுல்தானா அமீனா மற்றும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைகளில் இருந்து 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு செல்ல அனுமதிக்கப் பட்டனர்.

143 பேர் இன்னும் மருத்துவமனைகளில் இருப்பதாகவும், 36 நோயாளிகள் ஜோகூர் பாருவுக்கு வெளியிலும் 29 பேர் ஜோகூர் மாநிலத்தின் வெளியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 7 நோயாளிகள் அவசர கண்காணிப்புப் பிரிவுகளில் உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker