Latestமலேசியா

அமைச்சர்களையும்  MACC கண்காணிக்க வேண்டும் – அன்வார்

கோலாலம்பூர், மார்ச். 18 – முந்தைய ஆட்சியின் ஊழல்களை  எம்ஏசிசி  எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம்  வெளிக் கொணர்வதோடு,  தற்போதைய அமைச்சர்கள், அதிகாரிகளின் மீதும் கவனத்தைத் திருப்ப வேண்டுமென  டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் கேட்டுக் கொண்டார்.

ஊழலுக்கு முடிவே இல்லையென்பதை பிரதமர் துன் மகாதீரும் குறிப்பிட்டுள்ளதாச் சுட்டிக்காட்டிய அன்வார், அது பற்றி மக்களவை நிர்வாகச் சீர்திருத்த குழுவின் தலைவர் டான்ஶ்ரீ அபு காசிமிடமும்  பேசியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

1எம்டிபி, பெல்டா போன்ற ஊழல் விவகாரங்களோடு, தற்போதைய அரசின்  அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊழல் நடவடிக்கையையும் எம்ஏசிசி கண்காணிக்க வேண்டுமென பேரரசரின் உரை மீதான விவாதத்தில் பேசும்போது அன்வார்  குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker